news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 28 December 2018



நமது அமைப்பின்மதுரை மாவட்டத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ள திரு. சரவணமுருகன்  சார் அவர்களுக்கு நமது அமைப்பின்  மாநில பொதுச்செயலாளர் திரு. இரா. பிரபாகரன்அவர்கள் சிறப்பு செய்த தருணம். திரு சரவணன் முருகன் சார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ðŸ’
நமது அமைப்பில் சிவகங்கை மாவட்ட தலைவராக  இருந்து  திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பதவி ஏற்றுள்ள திரு. உதயசங்கர் சார் அவர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணம். மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்  🤝💐💐💐💐

நமது அமைப்பின் பொதுச் செயலாளரின் செய்தி

அனைவருக்கும் வணக்கம்.
 ஒரு தலைவன் தான் இருந்த முதுகலைஆசிரியர் பணித் தொகுதிக்கும், இன்றைக்கு உள்ள தலைமை ஆசிரியர் பணித்தொகுதிக்கும் உண்மையாய்  உழைத்திருக்கிறேன், உழைப்பேன் என்று உறுதி கொண்டு இன்று ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளார். இது நாள் வரை சரியாய் முடிவெடுக்கும் தலைவன் இன்று எடுத்திருக்கும் முடிவு தவறாகவா போய்விடும். நாமும் மாநிலத் தலைவர் அவர்களை ஒரு தீர்க்கதரிசி என்று தானே முதுகலை ஆசிரியர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் திட்டமிடச்  செய்தோம்.
தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற நம் முதுகலை ஆசிரியர்கள் எந்த ஓர் அமைப்பிலும் சேராமல் தலைவரின் வருகைக்காக காத்திருந்த நிலையிலும், தலைமை ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் உள்ள இடைவெளியை குறைத்திடவும் , தலைமை ஆசியர்களின் சுயமரியாதையையும்  காப்பாற்றினால்தான் மேல் நிலைக் கல்வியில் ஆசிரியர்களுக்கென்று மரியாதையை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையில்தான் தன்னலமற்ற சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்துள்ளார்.
இரு முறை 2010, 2014-லும் வந்த தலைமை ஆசிரியர் பணி உயர்வினை துறந்தது மு.க.ஆ க்காகத்தானே.2018ல் வந்த பதவி உயர்வினை ஒத்திப் போட வேண்டாம்.ஒய்வுக்கால பலனாக இருக்கட்டும் என்று நாம் தானே நம்முடனேயே இருக்கக் செய்தோம். 2010ல் தலைமை ஆசிரியராக பணி உயர்வு பெற்றிருந்தால் இன்றைக்கு இருக்கும் அனைத்து அமைப்புகளிலும் மூத்தவராக இவர்தானே இருந்திருப்பார். யோசிக்கவும். நமக்காக இழந்தது தானே யாவும்.

1990 ஆண்டிலே அமைப்பிற்கு வந்தவர் , 2006 ஆண்டு தலைமைப் பதவிக்கு வந்து பெற்றுத் தந்த சாதனைகளை ,உரிமைகளை வேறு எந்த அமைப்பின் தலைவனும் நம் பணித்தொகுதிக்கு பெற்றுத் தந்தது இல்லை. ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது கிடையாது. அப்படிப்பட்ட நிலைதான் தலைமை ஆசிரியர்களுக்கான அமைப்பை உருவாக்க வைத்தது.
போராட வேண்டும் , வெற்றி கிட்டும் வரை போராட வேண்டும் , இறுதிவரை போராட வேண்டும் என இருப்பவனே தலைவன். அவர்தான் மணிவாசகன். நான் கூறியதில் 1% கூட உங்களுக்குள் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.
ஏற்கனவே உள்ள த ஆ அமைப்பின் தலைமையிடம் போராட்டக் காலத்தின் போதும், சாதாரண நிலையிலும் பேசிப் பார்த்தாலும் தலைமை ஆசிரியர்களுக்கு என்று எந்த விதமான போராட்டமும் நடத்த முன்வராத தலைமை, தனிச் சங்க போராட்ட வரலாறே இல்லாத அமைப்பாய் உள்ள நிலையில்தான் தலைமைஆசிரியரின் தன்மானம் காக்க 
வந்ததுதான் இந்த புதிய அமைப்பு.
2009ல் நம்முடன் சேர்ந்து நடத்திய போராட்டத்தின் மூலம் தான் 30.1.2009 ல் நடந்திட்ட பேச்சுவார்த்தையின் மூலம் பெற்றது தான் PA , SR , 
35/40 DE0 இம் மூன்றும் தலைமை ஆசிரியருக்கானது. தனியான சாதனை ஏதும் இதற்கு பின்னர் இல்லை.
2011 ல் மேல்நிலையில் உள்ள 3அமைப்புகளும் சேர்ந்து நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதுதான் இணைந்த போராட்டம்.தலைவரின் யோசனைப்படி போயிருந்தால் அன்றைய பேச்சுவார்த்தையிலேயே விடைத்தாள் உழைப்பூதியம் ரூ.10/= பெற்றிருக்கலாம். தலைமை ஆசிரியர்களின் நிலையில்லாத தன்மைமையால் தான் நாம் நமக்கான உரிமையை இழந்தோம். இந்த அனுபவத்தில் தோன்றியது தான் தலைமை ஆசிரியருக்கான இவ்வமைப்பு .
நம் மாநிலத் தலைவரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் 20 மாவட்டங்கள் , 110 தலைமை ஆசிரியர்கள் என திருச்சியிலே திரண்டனர். இவர்களுக்கான நம்பிக்கையை ஏமாற்ற முடியுமா? தன்னலம் கருதாமல் , தனக்கு இன்னும் பணிப்பளு அதிகரிக்கப் போகிறது என்றும் , மன அழுத்தம் அதிகரிக்கும் என்று தெரிந்தும் தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை ஏற்க முடியும் என்றால் நம் மாநிலத் தலைவர் 
திரு வே மணிவாசகன் அவர்களால் மட்டுமே முடியும் என்பது வெள்ளிடைமலை உண்மை.
தாய்க் கழகம் மற்றும் முதன்மைக் கழகத்திடம் இருந்து உருவாகியிருக்கும்  அமைப்புதான் தலைமை ஆசிரியர் கழகம் எனும் குழந்தை. இரண்டையும் பாதுகாக்கும் வல்லமையும் பொறுப்பும் உணர்ந்தவர் தான் தலைவர் என்பதை அனைவரும் உணர்வோம்.
உணர்ந்தோம்.
உணர்வால் இணைவோம். நன்றி.
இரா.பிரபாகரன்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் .

Wednesday 26 December 2018

அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,


24.12.18   அன்று தினமணியில் வெளியான "தேவையா இத்தனை  விடுமுறைகள்" கட்டுரை வாசித்தேன்.  அது குறித்து அடிப்படையான சில உண்மைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இந்த உண்மைகளை கட்டுரையாளர் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளது.  ஆனால் பத்திரிகை செய்தி ஆசிரியருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்.

# 2019 தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு விடுமுறை பட்டியலில்  22 விடுமுறைகளில்  5 நாட்கள் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அமைகிறது.  இந்த ஆண்டு இது குறைவு

#  அதே போல மத விடுப்புகள் பெரும்பாலும் பண்டிகை அரசு விடுமுறை நாட்களிலோ சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ அமைகின்றன.

#  ஈட்டிய விடுப்பு அரசு ஊழியர்களுக்கு தான் 30 நாட்கள். ஆசிரியர்களுக்கு  17 நாட்கள் தான். இந்த விடுப்பை துய்க்காமல் ஒப்படைத்தால் பணப்பயன்கள் உண்டு என்கிற காரணத்தால்  90 சதவீத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த விடுப்பை துய்ப்பதில்லை. சேமிக்கவே விரும்புவார்கள்.  இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. 

. # 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் 1 நாள் ஈட்டிய விடுப்பு குறையும்.  28 நாட்களுக்கு மேல் தாண்டினால் மருத்துவர் போர்டு மற்றும் மாவட்ட உயர் அதிகாரியின் அனுமதி பெற்று தான் மீண்டும் பணியில் சேர முடியும்.  மருத்துவ விடுப்புகளால் பதவி உயர்வு, ஆண்டு ஊதிய உயர்வு, பணி வரன்முறை போன்ற தனிப்பட்ட பாதிப்புகள் இருப்பதால் மருத்துவ விடுப்பு மிக அவசியமானால் மட்டுமே துய்க்கப்படுகிறது. 15 நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்தாலே அதில் 4 நாட்கள் வார விடுமுறையாகும்.
# உள்ளூர் விடுமுறைகள் அனைத்தும் சனிக்கிழ மைகளில் ஈடு செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே.

# அரசு தலைவர்கள் இறப்பின் போது விடப்படும் விடுமுறை பாதுகாப்பு கருதியே. ஓய்வு எடுக்க அல்ல.

# தொடக்கப் பள்ளிகள்  220 பணி நாட்கள் , மேல்நிலைப் பள்ளிகள்  210 பணி நாட்கள், கல்லூரிகள்  180 பணி நாட்களுக்கும் குறையாமல் பணியாற்ற வேண்டும் என்பது அரசு விதி. மற்ற அரசு  அலுவலகங்கள் இதை விட அதிக நாட்களே செயல்படுகின்றன.யாரும் மீற முடியாது.இது  வருகைப்பதிவேட்டை பார்த்தாலே தெரியும். இப்படியிருக்கையில் 174 நாட்கள் தான் பணி நாட்கள் என்று கட்டுரையாளர் எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது தெரியவில்லை.

# காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை ஆகியவை மாணவர்கள் மனநலம், கற்கும் திறன்,சோர்வு,உடல்நலன் ஆகியவற்றை யோசித்தே கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் சிபாரிசு செய்யப்படுகிறது  . இந்த  விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை ஊதியம் பெறாமல் பணியாற்ற தயாரா எனக்கேட்கின்றார் கட்டுரையாளர்.  இந்த விடுமுறைக்கு மட்டும் வேறு வேலை தேட முடியுமா?

# தேர்தல் நாளன்று அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள் என்ற சாதாரண விஷயம் கூட கட்டுரையாளருக்கு  நினைவுக்கு வரவில்லை.

# சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சுட்டிக்காட்டிய கட்டுரையாளர் இந்தியா ஒரு மதசார்பற்ற, நல்லிணக்கம் காட்டும் பல்வகை கலாச்சாரத்தை கொண்ட நாடு என்பதை மறந்துவிடக்கூடாது.  இங்கே அனைத்து வகையான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. 

# அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகளால் அரசுக்கு எவ்வித நஷ்டமுமில்லை

# பல வகை விடுப்புகள் இருந்தாலும் விடுப்பு அனுமதி  கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் காவல்துறை நண்பர்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி பார்க்கின்றோம்.

# விடுப்பு இருந்தும் அதிகாரிகள் /தலைமை ஆசிரிய்ர்கள் அலுவலக நலன் கருதி அனுமதி தராததால் அதை அனுபவிக்க முடியாதவர்கள் ஏராளம்.

# பெரும்பாலானவை ஈராசிரியர் பள்ளிகளாகவே இருப்பதால் விடுப்பு இருந்தாலும் தேவைப்படும்போது துய்க்க முடியாதவர்கள் ஏராளம். 

# கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு சனி ஞாயிறு  விடுமுறை இரவு பகல் என்பதே  கிடையாது.  மாவட்ட ஆட்சியர்,வட்டாட்சியர் எப்போது அழைத்தாலும் செல்ல தயாராக இருக்க வேண்டும்.

# தீபாவளி, புத்தாண்டு பண்டிகைக்கு வீட்டுக்கு செல்லாமல் பணியாற்றும் காவல்துறையினர், போக்குவரத்துக்கு ஊழியர்கள் இவருடைய கண்களுக்கு புலப்படவில்லை போலும்.

# சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் நகராட்சிக்கு  குடிநீர் வழங்கும் ஊழியர்கள்,  ஆண்டு முழுவதும் செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள், மின்சார ஊழியர்கள்..இவர்களை பார்த்த பின்பும் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று புலம்புவதை என்னவென்பது.

பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது

ஒரு தரமான நாளிதழ் இதை போல எடுத்தேன் கவிழ்த்தேன் ரக கட்டுரைகளை பிரசுரிப்பது அழகல்ல.

DEO பணிக்கு கலந்தாய்வு நடத்த கோரிக்கை



தமிழக பள்ளிக்கல்வியில்
நிர்வாக ரீதியாக பலமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்த்தப்பட்டது.


இதற்கிடையே, புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, பிரத்யேக அலுவலகம் வழங்கப்படவில்லை. மேலும், 50 மாவட் டங்களுக்கான அதிகாரி பணியிடங்கள் கூடுதல் பொறுப்பாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட் டுள்ளதால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்படுகின்றன.இதுதொடர்பாக அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூறும்போது, ‘‘பள்ளிக்கல்வியில் 50-க்கும் அதிகமான மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

பதவி உயர்வு அடிப்படையில் டி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டால் ஓராண்டுக்குப் பின், முதன்மைக் கல்வி அதிகாரியாக பொறுப்பேற்க முடியும். பொறுப்பு அதிகாரிகளாக இருப்பதால், பணிமூப்பு பட்டியலில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த காலிப் பணியிடங்களில் நிரந்தர அதிகாரிகளை கலந்தாய்வு மூலம் பள்ளிக் கல்வித் துறை நியமிக்க வேண்டும்’’ என்றனர்

Tuesday 25 December 2018

2018 -2019 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விளக்கங்கள் :
                         



RH LIST 2019 - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்         

 1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை

2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்
3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்
4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி
5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்
6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்
7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்
8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்
9. 01-06-2019; சனி- ஷபே காதர்
10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு
11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.
12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா. 
13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்
14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.
15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை
16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்
17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி
18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்
19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்

20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்